பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்து ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமபுரம்புதூர் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் அதே பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அப்போது ஆசிரியை விஜயலட்சுமி வகுப்பறையில் சக மாணவனை மலத்தை அள்ள வைத்துள்ளார். இது தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் ஆசிரியை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியை விஜயலட்சுமி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.






