நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் விபரம்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 195 ஓட்டுச்சாவடிகளில், 1.18 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இந்த வாக்குகள் அவிநாசியை அடுத்துள்ள பெரியபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி துவங்குகி இன்று அதிகாலை 3.45 மணி வரை நடைபெற்றது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி மன்ற தலைவர்கள்…
1) பூஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக 561 வாக்குகள் பெற்று 274 வாக்குகள் வித்தியாசத்தில் சரவணன் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.
2) மங்கரசவளையபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 2080 வாக்குகள் பெற்று 1840 வாக்குகள் வித்யாசத்தில் வரதராஜன் ம.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
3) பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவராக 1817 வாக்குகள் பெற்று 1310 வாக்குகள் வித்யாசத்தில் விமலா அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.
4) ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக 900 வாக்குகள் பெற்று 169 வாக்குகள் வித்யாசத்தில் பழனிச்சாமி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
5) தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 1033 வாக்குகள் பெற்று 179 வாக்குகள் வித்யாசத்தில் மயில்சாமி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
6) முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 2006 வாக்குகள் பெற்று 1330 வாக்குகள் வித்யாசத்தில் ரவிக்குமார் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
7) பாப்பாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 1429 வாக்குகள் பெற்று 631 வாக்குகள் வித்தியாசத்தில் கவிதா தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
8) தத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவராக 1299 வாக்குகள் பெற்று 146 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய்குமார் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
9) அய்யம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 424 வாக்குகள் பெற்று 251 வாக்குகள் வித்தியாசத்தில் கருப்பன் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
10) வடுகபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 886 வாக்குகள் பெற்று 447 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்பிரமணியம் சுயேட்சை வெற்றி பெற்றார்.
11) கருமாபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 777 வாக்குகள் பெற்று 255 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கொடி சி.பி.ஐ. வெற்றி பெற்றார்.
12) ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக 1578 வாக்குகள் பெற்று 1308 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிச்சாமி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
13) சேயூர் ஊராட்சி மன்றத் தலைவராக 2447 வாக்குகள் பெற்று 1307 வாக்குகள் வித்தியாசத்தில் வேலுச்சாமி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
14) குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 790 வாக்குகள் பெற்று 379 வாக்குகள் வித்தியாசத்தில் கலைவேணி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
15) போத்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சத்யா அ.தி.மு.க வேட்பாளர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
16) உப்பிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 1008 வாக்குகள் பெற்று 429 வாக்குகள் வித்தியாசத்தில் சரண்யா தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
17) நம்பியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 1682 வாக்குகள் பெற்று 720 வாக்குகள் வித்தியாசத்தில் பாக்கியலட்சுமி தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
18) குட்டகம் ஊராட்சி மன்றத் தலைவராக 796 வாக்குகள் பெற்று 64 வாக்குகள் வித்தியாசத்தில் புவனேஷ்வரி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
19) காணூர் ஊராட்சி மன்றத் தலைவராக 1390 வாக்குகள் பெற்று 167 வாக்குகள் வித்தியாசத்தில் மயில்சாமி சுயேட்சை வெற்றி பெற்றார்.
20) நடுவச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக 685 வாக்குகள் பெற்று 224 வாக்குகள் வித்தியாசத்தில் வரதராஜன் தி.மு.க. வெற்றி பெற்றார்.
21) வேட்டுவபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 1392 வாக்குகள் பெற்று 434 வாக்குகள் வித்தியாசத்தில் கணேசன் பா.ஜ.க. வெற்றி பெற்றார்.
22) சின்னேறிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 975 வாக்குகள் பெற்று 178 வாக்குகள் வித்தியாசத்தில் சரவணன் காங்கிரஸ் வெற்றி பெற்றார்.
23) புலிப்பார் ஊராட்சி மன்றத் தலைவராக 837 வாக்குகள் பெற்று 173 வாக்குகள் வித்தியாசத்தில் செல்வி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
24) துலுக்கமுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக 642 வாக்குகள் பெற்று 18 வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
25) செம்பியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக 2498 வாக்குகள் பெற்று 1588 வாக்குகள் வித்தியாசத்தில் சுதா அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
26) பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவராக 4701 வாக்குகள் பெற்று 2034 வாக்குகள் வித்தியாசத்தில் கோமதி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
27) புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 1306 வாக்குகள் பெற்று 71 வாக்குகள் வித்தியாசத்தில் கஸ்தூரி பிரியா பா.ஜ.க. வெற்றி பெற்றார்.
28) வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 1992 வாக்குகள் பெற்று 423 வாக்குகள் வித்தியாசத்தில் சாந்தி தே.மு.தி.க. வெற்றி பெற்றார்.
29) கணியாம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவராக 1145 வாக்குகள் பெற்று 270 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கமணி தி.மு.க. வெற்றி பெற்றார்.
30) தெக்கலூர் ஊராட்சி மன்றத் தலைவராக 2298 வாக்குகள் பெற்று 477 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதமணி அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
31) கருவலூர் ஊராட்சி மன்றத் தலைவராக 976 வாக்குகள் பெற்று 410 வாக்குகள் வித்தியாசத்தில் மாரிமுத்து அ.தி.மு.க. வெற்றி பெற்றார்.
அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு மொத்தமுள்ள 19வார்டு உறுப்பினர்கள் … இதில்
அ.தி.மு.க : 9
தி.மு.க. : 2
ம.தி.மு.க. : 1
பா.ஜ.க. : 1
தே.மு.தி.க. : 1
சுயேட்சை : 4
சி.பி.எம் : 1
அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு 1வது வார்டு உறுப்பினராக ம.தி.மு.க. வேட்பாளர் சர்மிளா கோவிந்தராஜ் 2,376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் ரம்யாவை விட 624 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
2வது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் உமா 2,160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் சரண்யாவை விட 676 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
3வது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் உமாபதி 2333 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் மேகலாவை விட 752 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
4வது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் நந்தினி 1546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் நாகமணியை விட 60 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
5வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் விஜயா 2497 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் செல்வியை விட 674 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
6வது வார்டு உறுப்பினராக பா.ஜ.க. வேட்பாளர் மாதவன் 2303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சரவணனை விட 177 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
7வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் கவிதா 2659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் வணிதாவை விட 890 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
8வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் அய்யாவு 2814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமியை விட 1193 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
9வது வார்டு உறுப்பினராக தே.மு.தி.க. வேட்பாளர் பிரசாத்குமார் 1640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பழனிச்சாமி விட 92 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
10வது வார்டு உறுப்பினராக சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேயன் 1588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் பூபதியை விட 836 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
11வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் சேதுமாதவன் 2541 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் சுந்தரமூர்த்தியை விட 688 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
12வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 2168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமாரை விட 585 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
13வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் பிரபா 1857 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் காந்திமதியை விட 10 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
14வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் ஜெகதீசன் 2100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சதீஸ்குமாரை விட 1049 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
15வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா 1519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் பூங்கோதையை விட 555 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
16வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் லோகநாதன் 2519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கொ.ம.தே.க வேட்பாளர் கணேசனை விட 1162 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
17வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயந்தி 1566 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க. வேட்பாளர் கலைவாணி விட 383 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
18வது வார்டு உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் சித்ரகலா 2198 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் புஷ்பவதியை விட 429 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
19வது வார்டு உறுப்பினராக சி.பி.எம். வேட்பாளர் முத்துச்சாமி 2198 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஜெகதீஸ் விட 686 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்:
1) 1வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் சீதாலட்சுமி 24209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் லலிதாவை விட 8166 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
2) 2வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி 20065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் செமீம்-ஐ விட 5361 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.