--- --:--:-- --

லிப்ட் அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

13

மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கட்டுமான நிறுவன அதிபரும் அவரது குடும்பத்தினரும் என 6 பேர் உயிரிழந்தனர்.

 

பார்த் இந்தியா எனும் பிரபல கட்டுமான அதிபர் புனித் அகர்வால் இந்தூர் அருகே பட்டல்பானி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததாகவும், கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்கும் பொருட்டு கட்டுமானத்திற்காக வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள லிஃப்டில் ஏறி மேலே சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

அப்போது திடீரென 70 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்ததில் அதில் இருந்த புனித் அகர்வால், அவரது மகள், மருமகன் பேரன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon