ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்; 13 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
81 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், நக்சல்கள் அட்டூழியம் இருப்பதால், இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நக்சல்களின் தாக்குதல் அபாயம் இருப்பதால், துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடைபெறுகிறது.

தற்போது ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது. டிசம்பா 20-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், டிசம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட், சட்டப்பேரவை தேர்தல், முதற்கட்ட வாக்குப்பதிவுட்சி நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது. டிசம்பா 20-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், டிசம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




