--- --:--:-- --

மகாராஷ்டிரா விவகாரத்தில் போர்க் கோலம் பூண்ட காங்., எம்.பி.க்கள் ; மக்களவை,மாநிலங்களவை ஒத்திவைப்பு

yed

மகாராஷ்ராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ரகளை, அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

மகாராஷ்டிரா விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மகாராஷ்டிரா விவகாரத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த நிலையில், மக்களவை கூடியவுடனே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்னை எழுப்பினார்.மகாராஷ்டிராவில் நடந்துள்ளது ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்து ஆவேசமாக பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்களும் மத்திய அரசைக் கண்டித்து, மக்களவையின் மையப்பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.

 

காங்கிரசுக்கு ஆதரவாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ரகளையில் ஈடுபட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது, சபைக்குள் பிரம்மாண்ட பேனரை உயர்த்திக் காட்டி கூச்சலிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஓம்பால் உத்தரவிட்டார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவேசமடைந்து, மேலும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதேபோல் ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற வளாகம் முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon