அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு
ஓர் ஒன்றியத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தலைமை இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் குறுவள மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்த மையத்தின் தலைமை இடத்தில் செயல்படும் மேல்நிலைப்பள்ளி அல்லது உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடக்க கல்வித்துறையின் கீழ் வந்த தலைமை ஆசிரியர்கள் இனி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




