ஆண்டிரியாவின் தவறான உறவு ! கொலை மிரட்டல்!
திருமணமான ஒருவருடன் தகாத உறவிலிருந்து பல கொடுமைகளை அனுபவித்ததாகவும் அவர் பெயரைத் தான் எழுதும் புத்தகத்தில் வெளியிடுவேன் எனவும் கூறிய ஆண்ட்ரியாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திருமணமான ஒருவருடன் உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் நடிகை ஆண்ட்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட இந்த தகவல் தான் இன்றுவரை கோலிவுட்டில் சர்ச்சைகளை விளைத்துள்ளது. வலுவான,துணிச்சலான கதாபாத்திரங்கள் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் ஆண்ட்ரியா.
தற்பொழுது பாலியல் புகாரின் மூலம் பேசு பொருளாக மாறி இருப்பதுதான் சர்ச்சைகளை விதைத்துள்ளது. புகார் புத்தகத்தின் பெயர் என்று சென்று கொண்டிருந்த இந்த விவகாரம் ஆண்டிரியாவிற்கு கொலை மிரட்டல் என்ற நிலைக்கு வந்துள்ளது.
திருமணமான ஒருவருடன் தகாத உறவில் இருந்த போது மிகக் கொடிய அனுபவித்ததாகவும் ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் ஆண்ட்ரியா.இந்தப் புகார் வெளியானதுமே அந்த நபர் யார் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் எழ ஆரம்பித்தன. அவர் ஒரு அரசியல்வாதியின் வாரிசு என்றும் தற்பொழுது சினிமாவில் உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த நபரின் பெயரை தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா. இந்த புத்தகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அது வெளியாகவில்லை.
ஆண்ட்ரியா மிரட்ட படுவதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியானாலும் தற்போது வரை அவர் இது குறித்து வாய்திறக்கவில்லை. இந்த நிலையில் புத்தகத்தை வெளியிட்டால் கொலை செய்யப்படுவாய் என ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல் விடப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
உண்மையில் தனக்கு பாலியல் தொல்லை அளித்தது யார்?, அதனை வெளியிட்ட காரணத்திற்காக கொலை மிரட்டல் விடப்படுகிறதா? ,கொன்றுவிடுவேன் என மிரட்டுவது யார்? என்ற கேள்விகளுக்கு ஆண்டிரியா தான் பதிலளிக்க முடியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




