தனது குடும்ப பெண்களையே ஆபாசமாக படம் எடுத்த காமக்கொடூரன்!

ஆபாச படங்களுக்கு அடிமையான இளைஞரொருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். உச்சபட்சமாக அவர் செய்த செயல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பெண்கள் குளிக்கும் போதும், ஆடை மாற்றும் போதுதான் ஆபாசமாக படம் பிடிக்க முடியும் என்பதில்லை. பொது இடங்களில் வைத்தே அவர்களை ஆபாசமான கோணங்களில் படம் எடுத்து வந்துள்ளார் இவர்.

 

போலியான பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி அந்த படங்களை பதிவேற்றமும் செய்து வந்துள்ளார். அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் உடன் பணிபுரியும் தமது தோழிகளிடமும் இந்த வேலையை காட்ட முயன்ற போது போலீசாரிடம் சிக்கியுள்ளார் இவர். ஆபாச படங்களுக்கு அடிமையான இளைஞர் செய்துள்ள மற்றொரு செயல் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

சென்னை தண்டையார்பேட்டையில் பணிபுரியும் பெண் ஒருவரின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு மோசமான கமெண்ட்களுடன் முகநூல் பக்கங்களில் வலம் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கயாஸ் முகமது என்ற 27 வயது இளைஞரை கைது செய்தனர்.

 

முகம்மதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 27 வயதான கயாஸ் முகமது. முதுகலை பட்டதாரியான இவர் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்து தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

முகமது சிறு வயது முதலே ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததால் அதற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒருகட்டத்தில் முகநூல் பக்கத்தில் போலி கணக்குகளை தொடங்கி தன்னுடன் பழகும் பெண்கள், உடன் பணிபுரியும் பெண்கள் ஆகியோரின் புகைப்படங்களைக் ஆபாசமான முறையில் மார்பிங் செய்து அதனை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

 

சாலையில் நடந்து செல்லும் பெண்களையும், பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்யும் பெண்களையும் கயாஸ் முகமது ரகசியமாக ஆபாச கோணங்களில் படம் பிடித்து அதனையும் முகநூலில் பதிவேற்றியுள்ளார். உச்சகட்டமாக தமது குடும்பத்தில் உள்ள பெண்களையே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ள முகமது அதற்கு மிக மோசமான கமெண்ட் களையும் போட்டு வைத்திருந்தது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

உடன் பணிபுரியும் தோழியை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றியதால் அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட கயாஸ் முகம்மதுவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ரியாஸ் முகமது பின் இந்த செயலால் அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.


Leave a Reply