சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை; சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், திருச்சி நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளின் இன்று கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழ் நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 9 ஆயிரத்து 940 ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. திறந்து கிடக்கும் சாலையோர கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் குறித்து, 1077 என்ற எண்ணையும்; மாவட்டம் வாரியாக 1070 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக சிலர் கூறி வருகின்றனர். அவ்வாறு எதுவும் பரவவில்லை. இதுபற்றி சிலர் வதந்தியை தான் பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.