இரண்டு நாட்களுக்கு முன்பே தான் இறந்து விட்டதாகவும் தற்போது ஆவியாக வந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கட்சி ஒன்றின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய வசந்தகுமார் ஜி என்பவர் தான் வசந்தகுமார்ஜியின் ஆவி என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். தம்மீது 288 வழக்குகள் இருப்பதாக பெருமையுடன் கூறிய வசந்தகுமார்ஜி தம்மை பிணையில் எடுப்பதை உளவுத்துறை தான் என்றும் கூறினார்.
கமுதி கூட்டத்தில் வசந்தகுமார்ஜி பேசியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம், அப்படியாயின் வழக்கு வசந்தகுமார்ஜி மீது பதியப்படுமா? அல்லது அவரது ஆவி மீது பதியப்படுமா? என தெரியவில்லை.