கைதான உதித் சூர்யாவிடம் சிபிசிஐடியினர் விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூரியாவிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. உதித் சூர்யா குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். அவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.

 

அந்த புகாரை தொடர்ச்சியாக எடுத்து அந்தப் புகாரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர். அவருடைய தந்தை வெங்கடேசன் மற்றுமொரு சூர்யா அவருடைய தாயார் குடும்பத்தோடு தலைமறைவானார்கள். இதன் தொடர்ச்சியாக தேனி போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தினர்.

 

அவருடைய வீட்டிற்கு சென்று சென்னையில் முகாமிட்டு தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டிருந்தார். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு தேனி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பதி பகுதியில் இவர் தலைமறைவாக இருப்பது தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை குடும்பத்துடன் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது சென்னை கொண்டு வரப்பட்டு சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அ நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. தேடி தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து அதன்பிறகு சிபிசிஐடி ஒப்படைத்துள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு அவர்கள் தேனிக்கு கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply