இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது.2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முதல் நாள் நிகழ்வில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடியது குறித்தும்,இந்து முன்னணி செயல்பாடுகள் குறித்தும் நாட்டுநடப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இரண்டாவது நாள் நாளான இன்று சிறப்பு செயற்குழு கூட்டமும், அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழாவாக வெற்றிகரமாக நடைபெற்றது.இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு, ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது,ஹிந்தி எதிர்ப்பு என்று கபட நாடகம் ஆடும் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கண்டனம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வரும் தமிழகம் திருமாவளவனை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் பிரிவினை ஓடும் தீயசக்திகளை வேரறுப்போம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பின் 57 மாவட்டத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடையாள அட்டையுடன் கலந்துகொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாநிலதலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வருகின்ற ஜூன் மாதம் சென்னையில் இந்து முன்னணி மாநில மாநாடு நடைபெறுகிறது.அந்த மாநாட்டை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்திலே விவாதிக்கப்பட்டது என்றும்,தமிழகத்தில் உள்ள உளவுத் துறை மிகவும் மந்த நிலையில் உள்ளது என்றும், பங்களாதேசை சேர்ந்த முஸ்லிம்கள் எந்தவித அனுமதியும் இன்றி தமிழகத்தில் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாகவும்,மத்திய அரசின் உளவுப்பிரிவான என் ஐ ஏ தான் இதுகுறித்து சிலரை கண்டுபிடித்துள்ளனர் இது குறித்து மாநில உளவுப் பிரிவு உடனடியாக கண்காணிக்கவில்லை என்றால் கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது இவ்வாறு கூறினார்.