18 ஆண்டுகள் கழித்து சர்ச்சை கிளப்பும் புகைப்படம்

கனடா பிரதமர் ஜஸ்டின் 18 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழக பள்ளிகளை ஆர்வமாக கொண்டாடும் வழக்கம் உடையவர். கடந்த தீபாவளி பண்டிகையின் போது கனடா தலைநகரில் உள்ள இந்திய மக்களுடன் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

 

இந்தாண்டு தொடக்கத்தில் கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடி அசத்தினார். இதனால் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அவர்களுக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு அவர் பள்ளி தோழர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆப்பிரிக்க அமெரிக்க மக்களை கிண்டல் செய்யும் வகையில் ஜஸ்டின் வேடமிட்டு உள்ளதாக டைம் நாளிதழ் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் கன்னட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த புகைப்படம் அங்கு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு ஜஸ்டின் மன்னிப்பு கோரிய போதும் இந்த தேர்தலில் அவர் பின்னடைவை சந்திப்பார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply