80 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி மீட்டுள்ளனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. அந்தியூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாய நிலையத்திற்கு கிளி பிடிப்பதற்காக சென்று சின்னசாமி ஒரு கிணறு அருகே கிளியை தேடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார்.

 

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சின்னசாமி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Leave a Reply