‘வேலியே பயிரை மேய்வது போல’ காமக்கொடூர ஆசிரியர்!

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை. ஆனால் மாணவிகளிடம் பள்ளி ஆசிரியரை தவறாக நடந்து கொண்ட கொடூரம் புதுவையில் நடந்திருக்கிறது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள தவறு செய்த ஆசிரியர் கைது செய்யப்படுவாரா? அவரை கைது செய்யக் கோரி பள்ளியை மூடி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றிய அவர் கடந்த ஒரு வருடமாக தான் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றுகிறார். அங்கு அவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுக்க வருகிறார்.

இந்நிலையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் பலர் ஆசிரியர் உடலை வருடுவது, பின்பக்கம் தொடுவது, தேவையில்லாத இடங்களை பார்ப்பது போன்று பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து 12 மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தனர். அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் இதுபோன்று பல்வேறு மாணவிகளிடம் பாலியல் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ராஜசேகர் மீது புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார். அவரை கைது செய்ய சென்ற போது தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் ஆசிரியர் ராஜசேகரை கைது செய்ய வலியுறுத்தி பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களின் போராட்டத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இதனிடையே போராட்டம் நடத்திய பள்ளிக்கு முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறி அதற்கான ஆணையை காண்பித்தார்.

 

இதனையடுத்து இரண்டு மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது இதனையடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்றனர். வேலியே பயிரை மேய்வது போல் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply