மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இருப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. தலைமை செயலகத்தில் தமிழ்நாடு மின்சார கொள்கை 2019 முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
அதில் மின்சார வாகன உதிரிபாகங்கள் அதற்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில ஜிஎஸ்டி 100% திரும்ப வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 2030ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும், பேட்டரி உற்பத்தி முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும், மூலதன மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை வரும் 2025ம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில் பூங்காக்களில் மின்சார வாகனங்கள், மின்னேற்றி உபகரணங்கள், பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு நிலத்தின் விலை 20 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தென்மாவட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு நிலத்தின் விலை 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சலுகை வருகிற 2022ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்களை அமைக்க நிலம் வாங்குபவர்களுக்கு 2022ஆம் ஆண்டு வரை 100% முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துறை தொழில் நிறுவனங்களுக்கு 100% மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.