அதிமுக அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தமிழக மக்களின் ஆதரவோடு திமுக ஆட்சி மீண்டும் வளரும் என தெரிவித்தார். மேலும் உலகம் முதலீடுகளை கொண்டு வருவதாகக் கூறும் ஆதிமுக எந்தவொரு தொழிற்சாலையும் தமிழகத்திற்கு கொண்டுவரப்படவில்லை என முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல திமுக செயல்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் சிறிய குளத்தை தூர்வாரி விட்டு திமுக விளம்பரம் தேடுவதாக அவர் சாடியுள்ளார்.