குழந்தைகள் விழிப்புணர்வு ரோட்டரி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை. ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் ஆக.24 ல் ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பேரணியில் ஆறு ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
டில்லி, காஷ்மீர், லடாக் பகுதியில் இருந்து ஓசூர் மதுரை, இராமநாதபுரம் வழியாக கன்னியாகுமரி வரை சென்ற பேரணிக்கு ராம்நாடு ரோட்டரி மற்றும் நேஷனல் பள்ளிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ரோட்டரி தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா பேரணியின் நோக்கம் குறித்து பேசினார்.
காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா பேரணியில் பங்கேற்றவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவிகள் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா, துணை ஆளுநர்கள் நாகரத்தினம், அயூப்கான், பட்டய தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர்கள் ராஜமுத்து, ஜெயலட்சுமி மற்றும் ரோட்டரி ஈசிஆர், ராயல்ஸ் ஆகிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் துணை ஆளுநர்கள் சண்முக ராஜேஸ்வரன், சோமசுந்தரம், முனியசாமி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.