சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை சூளைமேடு எட்டாவது தெருவை சேர்ந்தவர் பானுமதி நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை 3 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
வீட்டில் கணவர் இல்லாததால் வலி தாங்க முடியாமல் பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலை பானுமதி சென்றுள்ளார். அப்போது பிரசவ வலி தாங்க முடியாமல் பானுமதி சாலையோரம் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதைக்கண்ட இரவு ரோந்து பணியில் இருந்த சூலைமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு அருகிலிருந்த குப்பை சேகரிக்கும் பெண்ணின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை 108 அவசர ஊர்தி அழைக்கப்பட்டு மருத்துவ உதவியாளர் தாயையும் சேயையும் பத்திரமாக காவல் ஆய்வாளர் ஒப்படைத்தார். ஆய்வாளர். இந்த புனிதமான செய்துவைக்க பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.






