இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை: பேனர் விவகாரத்தில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

பேனர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன் கண்ணதாசன் ஆகியோர் முறையீடு செய்தனர்.

 

அதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு பேனர் விவகாரத்தில் ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை என்று ஆதங்கப்பட்டார். உத்தரவிடும் நீதிமன்றத்திற்கு அதை செயல்படுத்தும் தகுதி இல்லை என்று நினைக்கிறார்களா என்று கோபமாக கேள்வி எழுப்பினர். மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ரத்தத்தை உறிஞ்சும் அவர்கள் போல் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக கூறிய நீதிபதிகள் மெரினா சாலையில் அரசியல் கட்சிக் கொடிகள் வைக்க அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பினர்.

 

அரசியல் கட்சிகள் கூடுதல் அரசு அமைப்பு பெற்றவர்கள் என்று கேட்ட நீதிபதி உடனடியாக கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கொடிகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்தனர். அதுதொடர்பாக மதியம் நேரில் ஆஜராகி பதில் அளிக்கவும் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply