யோகாசனங்கள் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய டூஷீன் தசை சிதைவு நோயால் பாதித்த சிறுவர்கள் !!!

கோவையில் டூஷீன் தசை சிதைவு நோயால் பாதித்த சிறுவர்கள் செய்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் யோகாசனங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

ஆண்டு தோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலக டூஷீன் தசைச் சிதைவு நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் கோவை டுஷன் தசைச் சிதைவு மரபணு பரிசோதனை , கலந்தாய்வு , பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி கோவை ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆடல்,பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.குறிப்பாக அனைவரும் இணைந்து மேடையில் செய்த பல்வேறு விதமான யோகாசனங்கள் அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

நிகழ்ச்சி குறித்து ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பி.ஆர்.லட்சுமி பேசுகையில், உலகம் முழுவதும் 3,500 குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தைக்கு தசைச் சிதைவு நோய் பாதிக்கப்படுவதாகவும்,இந்த நோய் மரபு வழியாக ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .

ஆண் குழந்தைகளை மட்டும் தாக்கும் இவ்வகை தசைச் சிதைவு நோய்க்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறிய அவர், இந்த நாளில் இவர்களுக்கென பிரத்தியேகமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நோயால் பாதித்த சிறுவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply