விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டுத் தெரிவித்துள்ளது. எதிர்காலத் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சூரிய மண்டலத்தை இஸ்ரோவுடன் சேர்ந்து ஒன்றாக ஆராய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து இருப்பதாக அறிவித்திருக்கிறது.

 

ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இஸ்ரோவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளது. சந்திரயான் திட்டம் தொடர்பான இஸ்ரோவின் முயற்சிகளும் அர்ப்பணிப்பும் ஏற்கத்தக்கது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று இஸ்ரோவின் சென்ற ஆண்டு திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply