கோவையில் குட்டீஸ்களுக்கான ஓட்டப்பந்தயம் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.ஆலயம் வெல்பேர் டிரஸ்ட் மற்றும் வேர் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூர் கிட்ஸ் ரன் எனும் பெயரில் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தய நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சியினை ஆலயம் வெல்ஃபேர் டிரஸ்ட் நிறுவனர் சந்திரசேகர் தலைமையில், அறங்காவலர் கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் லட்சுமிகாந்தன்,வேர் அமைப்பின் நிறுவனர் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஒரு வயது முதல் 13 வயதிற்குட்ப்பட்ட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
பந்தயமானது பிஷப் அப்பாசாமி கல்லூரியிலிருந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து தொடங்கி அவினாசி சாலை வழியாக மீண்டும் பிஷப் அப்பாசாமி கல்லூரியை அடைந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த பந்தயம் நடந்தது. குழந்தைகளுடன், பெற்றோர்களும் இணைந்து ஓடினர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், பங்கேற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.