இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்த சந்திரயான்-2 விண்கலம் அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கும் என அறிவித்திருந்தது.இதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் கால்பதிக்கும் தருணத்தை 130 கோடி இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விக்ரம் லேண்டர் சரியாக கீழே இறங்க ஆரம்பித்தது எதிர்பார்த்தபடி திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது அதனுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டு கிலோமீட்டர் நடை திட்டமிட்டப்படி பயணித்த லேண்டர் திசை மாறியது தரையிறங்கும் போது லாண்டரின் வேகம் திட்டமிட்டபடி குறையவில்லை .