இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய கண் கொடை நாள் மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் லைப்சேவர்ஸ் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும்.மேலும் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறி . உறுதிமொழியை காப்பாற்றுவது அவசியம். அவ்வாறு செய்தால் கண்தான உறுதிமொழியை அளித்தவர் இறக்கும் நிலையில் அவரது கண்களைத் தானம் கொடுக்க குடும்பத்தினர் தயங்கமாட்டார்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் P.ஜவஹர்லால் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் S.சுபாசங்கரி தலைமை கண் மருத்துவர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் V.சுப்ரமணியன்.மேலும் லைப்சேவர்ஸ் அரிமா சங்கம் சார்பில் பட்டய தலைவர் A.V.சதீஸ்குமார்,C.ஏகாம்பரம் (தலைவர்), D.சீனிவாசன் (செயலாளர்), A.சீனிவாசன் கண்தான ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருந்தாளுநர் ராஜா மற்றும் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.