நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஜயை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு!

முரசொலி ஆசிரியர் இல்ல சங்கத்தின் நிச்சய விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முரசொலி நாளிதழ் ஆசிரியர் முரசொலி செல்வம் செல்வி தம்பதியினரின் பேத்தி நிச்சயதார்த்த விழா சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

 

இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


Leave a Reply