கூவம் , ஆறு மாசுபடுத்திய வழக்கில் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிக்கவில்லை!

கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் எதையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கூவம் ஆறு தொடர்பான வழக்கில் பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும் அதனை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

 

அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்ததில் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மட்டுமே பசுமை தீர்ப்பாயம் கூறி இருந்ததாகவும், உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


Leave a Reply