காஷ்மீரில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால்
பிரதமர் மோடியின் புன்சிரிப்புக்காக மக்கள் விரோத திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி வருகிறார். மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது, பேசிய மோடி அரசை பாராட்டுவதற்கு பாஜகவில் ஆட்கள் இருக்கும்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏன் பாராட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் காஷ்மீரில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் கே. எஸ் அழகிரி குற்றம்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




