எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 13) வழங்குகிறார். விருது பெறும் கலைஞர்களுக்கு பொற்பதக்கமும், சான்றிதழும், காசோலையையும் அவர் அளிக்கிறார்.
இந்த விழாவுக்கு, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.