பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..உறவினர்கள் முற்றுகை போராட்டம்

பிரசவத்துக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருக்களம்பூர் பகுதியைச் சேர்ந்த பவிதா என்ற பெண்ணுக்கு கடந்த 24ம் தேதி, குடவாசல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

 

பிரசவத்திற்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்றைய தினமே அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், பவிதா நேற்று உயிரிழந்ததார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகவே பவிதா உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபரிடம் மனிதாபிமானமின்றி நடந்ததாகவும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறி பணியிலிருந்த செவிலியர்கள் உதயகுமாரி, பாரதி, திவ்யா மற்றும் தற்காலிக மருத்துவமனை ஊழியர்கள் ரவிக்குமார், சுந்தர்ராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியிலிருந்த மருத்துவர் லெனின் மீதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply