ஸ்கேட்டிங் மூலமாக பாம்பன் பாலத்தை கடந்து கோவை மாணவர் சதீஷ் குமார் உலக சாதனை

வரலாற்றில் முதன் முறையாக ஸ்கேட்டிங் மூலமாக பாம்பன் பாலத்தை கடந்து கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர் சதீஷ் குமார் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு, பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக , கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சதீஷ்குமார், ராம்நாடு ஈ.சி.ஆர்.பகுதியில் இருந்து அப்துல் கலாம் நினைவிடம் அமைந்துள்ள பகுதி வரை சுமார் 60 கி . மீ துாரத்தை,ரோலர் ஸ்கேட்டிங் மூலம் சென்றார்.

 

அப்போது,அவர் பாம்பன் பாலத்தை ஸ்கேட்டிங் மூலமாக கடந்தது உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றார்.இந்த சாதனையை படைத்த மாணவர் சதீஷ் குமாருக்கு கோவைபுதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில் பள்ளியின் நிர்வாக அலுவலர் உதயேந்திரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.தொடர்ந்து மாணவ,மாணவிகள் சாதனை மாணவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

 

இது குறித்து சதிஷ்குமார்,பேசுகையில் 105 வருட கால பாம்பன் பால வரலாற்றில் இது போன்ற சாதனை செய்தது,தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது போன்று இன்னும் பல சாதனைகள் படைப்பதே தமது அடுத்த இலக்கு என தெரிவித்தார்.

2015ம் ஆண்டு கன்னியாகுமரியில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில்,சர்வதேச சாதனையாக , ஆயிரத்து 226 கி.மீ துாரத்தை 48 மணி நேரத்தில் கடந்து மூன்று தங்க பதக்கங் களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply