ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்போலோ முயற்சி

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ எதையோ மறைமுக்க முயற்சிக்கிறது என விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இதுதொடர்பான விசாரணையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிப்பதாக விசாரணை ஆணையம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், விசாரணை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply