ரசிகரால் கீழே விழுந்த விஜய்! இணையத்தில் வைரல்

Publish by: --- Photo :


ஆர்வ கோளாறால் ரசிகர் ஒருவர் விஜய் தேவரக்கொண்டா பேசி கொண்டிருந்த போது காலை பிடிக்க விஜய் தவறி விழுந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அதன் பின்னர் ரஷ்மிக்கா மந்தனாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட்.
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவர கொண்டா ரசிகர்களை சந்தித்துள்ளார்.அப்போது கூட்டத்தில் ரசிகர் ஒருவர் திடீரென காலை பிடிக்க விஜய் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.அதே சமயம் இன்று வெளியாகியுள்ள டியர் காம்ரேட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.


Leave a Reply