ஒரு ரூபாயில் மத்திய அரசின் வருமானமும், செலவும்

கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி மற்றும் ஜி‌எஸ்‌டி வரி மூலம் தலா 21 காசுகள் வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. கடன் வாங்குதல் உள்ளிட்ட பிற வழிகளில் 19 காசுகள் வருவாயை அரசு ஈட்டுகிறது. வருமான வரி மூலம் 17 காசுகள் வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. வரி அல்லாத பிரிவுகளின் மூலம் 8 காசுகளும், மத்திய கலால் வரி மூலம் 7 காசுகளும் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. சுங்க வரி மூலம் 4 காசுகளும், பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை, கடன் வசூல் உள்ளிட்ட வழிகளில் 3 காசுகளும் அரசுக்கு வருவாயாக வருகிறது.

 

அரசின் செலவுகளை பொருத்தவரையில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய வரிகள் வகையில் 23 காசுகள் செலவாகிறது. கடன்களுக்கான வட்டி என்ற வகையில் 18 காசுகளை அரசு செலவழிக்கிறது. அரசின் திட்டங்களுக்காக 12 காசுகளும் செலவாகிறது. மானியங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி உதவியோடு கூடிய திட்டங்களுக்கு என தலா 9 காசுகள் செலவழிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு துறை, நிதிக்குழு, பிற வழிகளில் தலா 8 காசுகள் செலவாகிறது. ஓய்வு ஊதியத்திற்காக 5 காசுகளை மத்திய அரசு ஒதுக்குகின்றது.


Leave a Reply