டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மாதத் தொகுப்பு ஊதியம் முறையே 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என சட்ட பேரவையில் அரசு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு மாநில வாணிக கழகத்தில் 26,056 பேர் தொகுப்பு ஊதியம் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2019 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஊதிய உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு கூடுதலாக அறுபத்து இரண்டு கோடியே ஐம்பத்து மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


Leave a Reply