தேனி, சேலம் , ஈரோடு மாவட்டங்களில் மிதக்கும் சூரிய சக்தி மின்னழுத்த பூங்கா மின் திட்டம்

தேனி, சேலம் , ஈரோடு மாவட்டங்களில் மிதக்கும் சூரிய சக்தி மின்னழுத்த பூங்கா மின் திட்டம் குறித்து கொள்கை விளக்கம் குறிப்பில் இடம் பெற்றுள்ளது. 1,125 கோடி ரூபாய் மதிப்பீடு கொண்டது இந்த திட்டம். இந்த திட்டத்தின் கீழ் வைகை, மேட்டூர் மற்றும் பாவனி சாகர் அணைகளின் நீர் தேக்க பகுதிகளில் மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிட திட்டம் தீட்டி தேர்ந்து எடுக்கபட்டுள்ளன.

 

இந்த மிதவை சூரிய மின்உற்பத்தி நிலையங்களை சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உடன் சேர்ந்து நிறுவிட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா மூலம் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 250 மெகாவாட் மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பொதுப் பணித்துறையின் தேக்க பகுதிகளில் நிறுவிட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

 

உலக வங்கியின் 100 சதவீத பங்களிப்புடன் ஒப்பந்த புள்ளி வாயிலாக விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் நிறுவிட உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக கொள்கை விளக்கம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply