டிக் டாக் செயலியை தடை செய்யக்கோரிய வழக்கு விசாரணை

டிக் டாக் செயலியை தடை செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டிக் டாக் செயலியால் கலாச்சார சீர்கேடுகள், விபரீதங்கள் நடப்பதாக கூறி அதை தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

 

தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து பிரச்சனையையும் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக விசாரிக்கும் என்பதால் மனு தொடர்பாக விசாரணை நடத்த தலைமை நீதிபதியிலான அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.


Leave a Reply