எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.தென் மண்டல எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 5500 எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த லாரிகள் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

 

முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தின் படி அனைத்து எல்‌பி‌ஜி டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் 740 லாரிகளுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று காலை முதல் எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியது.

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் நீதிபதி வசந்தகுமார் நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை ஏற்று கொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.


Leave a Reply