ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் படி ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் 8 ஆம் தேதியும் , பரிசு நிலை 9 ஆம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவது 11 ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜூலை 18 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும்.

 

காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். ஜூலை 18 ஆம் தேதி அன்றே 5 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு நிறைவேறுகிறது. தமிழகத்தை பொருத்த வரை திமுக சார்பில் கனிமொழி , கே.ஆர். அர்ஜுனன் அதிமுக, மைத்ரேயன் அதிமுக , ராஜா சி‌பி‌ஐ, லட்சுமணன் அதிமுக, ரத்தினவேல் அதிமுக உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் என்பது ஜூலை 24 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

 

இதற்காக இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி பார்க்கும் போது திமுகவிற்கு 3 இடங்களும், அதிமுகவிற்கு 3 இடங்களும் ஏற்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது போட்டி இருந்தால் மட்டும் தான் தேர்தலானது நடைபெறும். அது இல்லாத பட்சத்தில் அவர்கள் முன் வைக்கக்கூடிய அவர்கள் மட்டுமே தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 

இந்த பட்சத்தில் தான் வாக்கு பதிவானது ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும். இல்லையென்றால் அவர்களுடைய பிரதிநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு அறிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. திமுகவை பொருத்தவரை மதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையின் பொழுதே வைகோவிற்கு ஒரு இடம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மீதம் இருக்கக்கூடிய 2 இடங்களில் தொமுசா வை சேர்ந்த சண்முகம், இளங்கோ , முன்னாள் அமைச்சர் சாமிநாதன், ராதாகிரிஷ்ணன், முத்து சாமி உள்ளிட்டோரும் போட்டியில் இருப்பதாக திமுக சார்பில் தகவல் உள்ளது. அதிமுக வட்டாரத்தை பொருத்த வரையில் மூத்த உறுப்பினர்களுக்கே கொடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். கூட்டணி பேச்சு வார்த்தையில் பாமக விற்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று கையெழுத்து ஒப்பந்தமானது. மீதம் உள்ள 2 இடங்களில் கடுமையான போட்டி அதிமுகவில் நிலவி கொண்டிருக்கிறது.


Leave a Reply