கணவரின் குடும்பத்தாரால் எனக்குப் பெரும்  தொல்லை!  போலீசில் புகாா் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை!!

மதுரை திருமங்கலத்தில் கணவர் குடும்பத்தாரின் கொடுமைகள் குறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்துடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னையில் அரசு அலுவலகம் முன்பில் பணிபுரிந்து வரும் சிவகாசியை சேர்ந்த அற்புதராஜ்க்கும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த புனித பவானி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

 

திருமணமான சில மாதங்களிலேயே கணவரிடமிருந்து தன்னை பிரித்து விட்டதாகவும், சிவகாசி வீட்டில் அடைத்து வைத்து மாமனார், மாமியார் கொடுமை படுத்ததாகவும் கூறுகிறார் புனித பவானி. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கம்யூனிஸ்ட் மற்றும் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். புனித பவானியின் இந்த குற்றச்சாட்டை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் மறுத்துள்ளனர்.


Leave a Reply