இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டித்தரும் ரஜினி,கமல் ரசிகர்கள்

தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டி வழங்குகின்றனர். கிரிஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச மழை நீர் தொட்டி வழங்கப்படுகிறது.

 

இதில் முதல் கட்டமாக கிரிஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு தொட்டி வழங்கப்படுகிறது. மேலும் கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை தங்களுடைய வீடுகளில் செயல்படுத்த விரும்புவோர் , தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும்,மத்திய மக்கள் மன்றத்தினர் கூறியுள்ளனர்.

 

இந்த இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டியை ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்குகிறார். இதே போல் தற்போது கமலஹாசனுடைய மக்கள் நீதி மையத்தினர் இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டியை வழங்க உள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளனர்.


Leave a Reply