தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராததால் பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்

Publish by: --- Photo :


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி திறந்த நாள் முதல் தற்போது வரை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் ,அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டும் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கை. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், போராட்டத்தை கைவிட்டனர்.


Leave a Reply