விஜய் பிறந்தநாள் பரிசாக வெளியான ‘தளபதி 63’ அப்டேட்

தெறி,மெர்சல் ஆகிய இரு படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து மீண்டும் இயக்குனர் அட்லி இயக்கும் புதிய படத்தை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தளபதி 63 என்று அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தளபதி 63 இன் அப்டேடுகள், படப்பிடிப்பு சம்பந்தமான காட்சிகள் விஜய்யின் வைரல் வீடியோக்கள் என அனைத்துமே ஹாஷ்டாக் தளபதி 63 என்ற பெயரின் கீழ் வெளியாகி வந்தன.

 

இந்த படத்தை பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்க என தயாரிப்பு நிறுவனத்தை தளபதி ரசிகர்கள் நச்சரித்த நிலையில் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்ற ரேஞ்சில் ஒரு புது அப்டேட்.தளபதி விஜய் நடித்து உருவாகி வரும் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ஒரு லுக்கில் மட்டும் ரசிகர்கள் திருப்தி அடைய மாட்டார்கள் என்பதால், அடுத்த லுக் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகிறது.

 

தளபதி 63 இல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.மேலும் காமெடி நடிகர் விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.


Leave a Reply