கன்னியாகுமாரி மக்களவை தொகுதி:வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

Publish by: --- Photo :


கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து 45,000 பேர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தேர்தல் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் மக்களவை தேர்தலுக்கு முன் 7 முறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது என்றும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தங்கள் பெயர் இடம் பெறவில்லை என எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

நீக்கம் செய்யபட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்தோடு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெயர் நீக்கம் செய்யபட்ட வாக்காளர்கள் ,வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள் மனுவை முடிக்க உத்தரவிட்டனர்.


Leave a Reply