சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்குமாறு தங்கள் தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் இருக்கும் சசிகலவை அமமுக முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார்.
அதன் பிறகு , நன்னடத்தை காரணங்களுக்காக சசிகலா விரைவில் வெளியேவர இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதில் எந்த வகை உண்மையும் இல்லை என தினகரன் கூறினார். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.