இளைஞர் கடத்தல் .. சிக்கினார் அமமுக பிரமுகர்!

சென்னையில் வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக வைச்சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

 

இவரை காணவில்லை எனவும் பாஸ்கர் என்பவர் கடத்தி இருக்கக்கூடும் எனவும் வேளச்சேரி காவல் நிலையத்தில் அவரது தந்தை பல்கீஷ் புகார் அளித்தார். இதையடுத்து ராஜீ ஷேக் ஜான் என்பவரின் செல் ஃபோன் நம்பரை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

 

விசாரணையில் அமமுக வேளச்சேரி மாணவர் அணி பகுதி செயலாளர் பாஸ்கர் என்பவரிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி தராததால் ரஜியை கடத்தி சென்று துன்புறுத்தியதாகவும் கூறினர்.

 

பாஸ்கரின் செல் ஃபோன் சிக்னலை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டு பிடித்த போலீசார் ரஜீயின் கடத்தல் தொடர்பாக அமமுக பிரமுகர்களான ஏழுமலை, கார்த்திக், பச்சு ராஜன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


Leave a Reply