சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சைகோ கொலைக்காரனின் சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை ராஜ மங்களம் பகுதியை சேர்ந்த அஸ்லம் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி ரெட்டெறி அருகே டாஸ்மாக் கடையின் பக்கத்தில் அஸ்லம் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவருடைய பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது. இதை போலீசார் அஸ்லம் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே கடந்த 31 ஆம் தேதி அஸ்லம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பரபரப்பு நடந்து முடிந்ததற்குள் மீண்டும் அது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருப்பது அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி ரெட்டெறி அருகே அதே டாஸ்மாக் கடையின் அருகே இளைஞர் ஒருவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொழில் தொடர்பாக வில்லிவாக்கம் வந்த நாராயணன் ரெட்டெறி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். போதையில் மயங்கி விழுந்த அவரை தாக்கியுள்ள மர்மநபர் அவரதுபிறப்புறுப்பையும் தாக்கியுள்ளார். தற்போது கவலைக்கிடமான நிலையில் நாராயணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் அஸ்லம் தற்கொலை செய்யவில்லை என உறுதிபடுத்தினார். அவரை சைகோ கொலைகாரன் தாக்கி பிறப்புறுப்பை அறுத்தத்தையும் உறுதி செய்துள்ளனர்.ஓரின சேர்க்கைக்காக ஆசை காட்டி வலையில் விழவைத்து அந்த நபர்களை தாக்கி அவர்களது பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்வது ஒரு சைகோ என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.