திருவாடானை பேருந்து நிலையம் மேற்கூரையில் ஓட்டை..!மாவட்ட நிா்வாகம் குறட்டை!! பயணிகள் திக்…திக்…

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் புதிய பேருந்து நிலையம் பல கோடி ரூபாய் செலவில் கடந்த சில வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையம் கட்டும் பொழுது அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கூரை அமைப்பதற்கு பிளாஸ்டிக் தகடுகளை அமைக்க வேண்டாம் இதை அகற்றிவிட்டு வேறு தகரத்தினால் ஆன சீட்டுகளை மாற்ற வாய்மொழி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் அவர் மாறுதலாகி சென்றதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து ஆங்காங்கே ஓட்டையாக உள்ளது. மேலும் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் நிற்க முடியாத அவலநிலை உள்ளது. திருவாடானையில் கடந்த மூன்று தினங்களாக காற்று சற்று வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் காற்றில் பறந்து கீழே விழுந்து விபத்து ஏற்படும் அளவிற்கு இருந்த நிலையில் ஊழியர்கள் தற்காலிகமாக அதை செய்து சரி செய்து வைத்துள்ளனர்.

மேலும் நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள தூண்கள் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் தரமில்லாமல் அமைந்துள்ளதால் திடீர் திடீரென கீழே விழுந்து விடுகிறது. நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

 

பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள இருக்கைகள் உடைந்து பழுதடைந்து உள்ளது அதில் உட்காரும் பயணிகளை பதம் பார்க்கும் அளவிற்கு உள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் திருவாடானை பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஓட்டை உடைசலாக உள்ள சேர் மேற்கூரை மற்றும் நுழைவாயில் தூண்களை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply