தனது சகோதரி காதலனை கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை எரித்த கொடூர தம்பி கைது

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனது சகோதரியை காதலித்தவரை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை மயானத்தில் எரித்து கொன்ற தம்பி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.நாகர்கோவிலையடுத்து கரியமாணிக்கபுரத்திலுள்ள ஒரு மயானத்தில் எரியூட்டும் மையத்தில் நேற்று கழுத்து, கன்னம் , முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்திகுத்து காயங்களுடன் எரிந்து கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதனிடையே வள்ளியூரில் வசித்து வந்த ரஜினிகுமாரை காணவில்லை என வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்த நிலையில் இறந்தவரின் அங்க அடையாளங்கள் ஆகிவற்றை கொண்டு போலீசார் அவர் ரஜினிகுமார் என்று உறுதிபடுத்தினார். ரஜினிகுமாரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது பெருமாள் புரத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவர் கடைசியாக அவரிடம் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து கேதீஷ்வரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய கேதீஸ்வரன் பின்னர் உண்மைகளை ஒப்புக்கொண்டார்.மனைவியை விவாகரத்து செய்த ரஜினிகுமார் கேதீஷ்வரனின் அக்கா அனுஷாவை காதலித்ததாகவும், இது கேதீஷ்வரனுக்கு பிடிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்தது. பல முறை எச்சரித்தும் ரஜினிகுமார் கேட்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதையடுத்து கேதீஸ்வரன் அவரது நண்பர்கள் ஃபைசல், பழனி ஆகியோர் ரம்ஜான் விருந்து வைப்பதாக கூறி ரஜினிகுமாரை காரில் அழைத்து சென்றதும் காருக்குள் வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் மையானத்தில் உடலை எரித்துவிட்டு தப்பி சென்றதாக கேதீஸ்வரன் தெரிவித்ததன் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply