திருவாடானை அருகே வாகனம் மோதி பெண் மான் வயிற்றில் இருந்த குட்டியுடன் பலி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆண் மான்!

திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் சாலையை கடக்க வந்த இரண்டு மான்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் மான் வயிற்றில் குட்டியுடன் பலி ஆன் மானுக்கு காயம் பட்டு கிடந்தது.

 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் காயம்பட்ட மானுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் இரண்டு மான்களை அருகில் இருந்த கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, காயம்பட்ட மானுக்கு உரிய சிகிச்சை அளித்து காட்டு பகுதிக்குள் விட்டனர். இறந்த மானை பிரேத பரிசோதனை சோதனைக்கு பின் புதைத்தனர்.

இது பற்றி இப்பகுதி மக்கள் கூறுகையில்:- என்.மங்கலம், அஞ்சுகோட்டை , சிறுகம்பை யூர், மங்கலகுடி போன்ற கண்மாய் காட்டு பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளது. கடந்த 4 வருடமாக கடும் வறட்சி நிலவி வருவதால், மான்கள் தண்ணீர் குடிக்க கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் பொழுது இது போன்ற விபத்து நடக்கிறது. இந்த பகுதிகளில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும். குடி தண்ணீர் தொட்டிகள் காட்டு பகுதியில் அமைத்தால் மான்கள் மற்ற விலங்குகள் காட்டை விட்டு வெளியில் வராது. இதற்கு வனத்துறையினர் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply